பொள்ளாச்சியில் பள்ளிக்கு சென்ற முதல் நாளே மாணவி தற்கொலை!
Pollachi School girl suicide
பொள்ளாச்சி அருகே, பள்ளியின் முதல் நாளில் கலகலப்பாக வீட்டிற்கு வந்த சிறுமி, சில மணி நேரங்களில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
ஜோதி நகர் அருகேயுள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த முருகானந்தத்தின் மகளான சரிகா, பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி. கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்குச் சென்றிருந்த சரிகா, வழக்கம்போல் மாலை வீடு திரும்பியிருந்தார்.
அந்த இரவு, வேலை முடிந்து வந்த பெற்றோர் கதவைத் திறந்தபோது, சரிகா தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், சரிகா செல்போனில் தகராறு ஏற்பட்டது என்றதும், அதில் மனமுடைந்த சரிகா தனியே இருந்த நேரத்தில் தற்கொலை செய்துக்கொண்டார் என்பது தெரியவந்துள்ளது.
அவர் பேசியிருந்த நபர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள, அவரது மொபைலை போலீசார் பறிமுதல் செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
English Summary
Pollachi School girl suicide