இந்தியாவின் 91வது கிராண்ட் மாஸ்டரானார் வி.எஸ். ராகுல்!
chess grandmaster rahul chennai
செஸ் கிராண்ட் மாஸ்டர் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற 6-வது ஏசியன் தனிநபர் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம். ஐ.எஸ்.டி.யில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவரான வி.எஸ். ராகுல், சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இத்தொடரில் இன்னும் ஒரு சுற்று எஞ்சியிருந்த நிலையிலேயே, அவர் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம், ராகுல் 2,400 என்ற ரேட்டிங் புள்ளிகளைக் கடந்து, கிராண்ட் மாஸ்டர் (Grandmaster - GM) பட்டத்திற்கான இறுதி ‘நார்ம்ஸை’ (Final GM Norm) நிறைவு செய்தார்.
இதன் விளைவாக, 21 வயதான ராகுல், இந்தியாவின் 91-வது கிராண்ட் மாஸ்டராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், இவர் எஸ்.ஆர்.எம். கல்லூரிக்குக் கிடைத்த 15-வது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்தச் சாதனை இந்திய செஸ் உலகில் அவரது முக்கியத்துவத்தையும், தமிழ்நாட்டின் செஸ் ஆளுமையையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
English Summary
chess grandmaster rahul chennai