40 லட்சம் மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ.9,000 வரவு வைப்பு; அசாம் மாநில அரசு அதிரடி..! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, அங்குள்ள 40 லட்சம் மகளிருக்கு ரூ.9000 வங்கிக்கணக்கில் வரவுவைத்துள்ளது. 

தேர்தலை ஒட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெண்களுக்கு ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், அசாமிலும் பெண்களுக்கு ரூ.9,000 வழங்கப்பட்டுள்ளது. அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு, மொத்தம் ரூ.3,600 கோடியை இன்று ஒரே நாளில் பெண்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக மாற்றியுள்ளது.

அசாம் அரசின் 'ஒருனோடோய்' திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.5,000 வழங்கப்பட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது ரூ.9,000 வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் ரூ.3,600 கோடியை இன்று ஒரே நாளில் பெண்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக மாற்றியுள்ளது. 

முன்னதாக அசாம் அரசின் ஒருனோடோய் திட்டத்தின்கீழ் பெண்களுக்கு மாதம் மாதம் ரூ.1,250 வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஜனவரி முதல் நான்கு மாதங்களுக்கான நிலுவைத் தொகை மற்றும் அசாம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான கூடுதல் தொகை ஆகியவற்றைச் சேர்த்து மொத்தமாக ரூ.9,000 வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தேர்தலுக்காக வழங்கப்பட்ட தொகை அல்ல என அசாம் முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு பாஜக அரசால் உருவாக்கப்பட்ட திட்டம். பெண்களின் மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பை அடிப்படையாக வைத்து கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,250 வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்தத் திட்டத்தின்கீழ் 40 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். 

இந்த திட்டத்தில் பயன்பெற பயனாளிகள் கொண்டிருக்கவேண்டிய தகுதிகள் அடிப்படையில் அவர்கள் அசாம் மாநிலத்தின் நிரந்தர குடியிருப்பாளராக இருக்க வேண்டும்.

அத்துடன், குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குக் குறைவாக இருக்க வேண்டும்.

குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒரு பெண் உறுப்பினர் இருக்க வேண்டும். அவரே பயனாளி பயனாளியாக இருப்பார்.

கைம்பெண்கள், விவாகரத்து பெற்றவர்கள் திருமணமாகாத 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rs 9000 deposited in the bank accounts of 40 lakh women in Assam


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->