வட கொரியாவுக்கு மீண்டும் பயணிகள் ரெயில் சேவையை தொடங்கிய சீனா..!
China resumes passenger train service to North Korea
வடகொரியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் இருந்த பயணிகள் ரெயில் சேவை கொரோனா வைரஸ் தொற்றால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் வருகிற வியாழக்கிழமை முதல் சீனாவின் பீஜிங்கில் இருந்து வடகொரியாவின் பியாங்யாங் நகருக்கு பயணிகள் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது. குறித்த ரெயில் வாரத்திற்கு நான்கு முறை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தினசரி ரெயில் சேவை டான்டோங் என்ன சீனாவின் எல்லையோர நகரில் இருந்து பியாங்யாங்கிற்கு இயக்கப்படும் என சீனாவின் ரெயில்வே ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
English Summary
China resumes passenger train service to North Korea