மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை... 4 வயது சிறுமிக்கு நேர்ந்த பெருங்கொடுமை!
kidnapped assaulted West Bengal
மேற்கு வங்கத்தின் தாராகேஷ்வர் பகுதியில் 4 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாராகேஷ்வர் ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை அதிகாலை, சாலையோரத்தில் பாட்டியுடன் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியை மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுமி காணாமல் போனதை கவனித்த உறவினர்கள் அவசரமாக தேடத் தொடங்கினர்.
சில நிமிடங்களில் அருகிலிருந்த ஒரு வாய்க்காலில் இருந்து சிறுமியின் அழுகுரல் கேட்டு, அங்குச் சென்றபோது, ஆடைகளின்றி நிர்வாணமாக ரத்தக் காயங்களுடன் சிறுமி கிடந்ததை கண்டனர். உடனே சிறுமியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது உறுதியாகியுள்ளது. முகம், குறிப்பாக கன்னத்தில் கடித்த காயங்களும், உடலில் பலத்த காயங்களும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது சிறுமி தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபரை பிடிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
English Summary
kidnapped assaulted West Bengal