எம்.எஸ். தோனி & ரசிகரின் க்யூட் மூமென்ட் வைரல்! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான எம்.எஸ். தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், அவரது பிரபலம் சற்றும் குறையவில்லை.

கபில் தேவுக்குப் பிறகு இந்திய அணிக்காக இரண்டாவது உலகக் கோப்பையை வென்று கொடுத்த பெருமைக்குரியவர் இவர். தற்போது, அவர் ஐபிஎல் (IPL) தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.

தோனி மைதானத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், சமூக வலைத்தளங்களில் அவரைப் பற்றிய வீடியோக்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன. அவர் ரசிகருக்கு ஆட்டோகிராப் போடுவது, பைக் ஓட்டுவது, அல்லது விமான நிலையத்தில் நடப்பது போன்ற எளிமையான காட்சிகள் கூட உடனடியாக இணையத்தை ஆட்கொண்டு விடுகின்றன.

அப்படியாக சமீபத்தில் ஒரு ரசிகரின் இரு சக்கர வாகனத்தில் எம்.எஸ். தோனி கையெழுத்திட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fans bike MS Dhoni autographs


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->