அரசியல்வாதியா? ஆலோசகரா? விஜயகுமார் ஐபிஎஸ் எடுக்கப் போகும் அடுத்த அவதாரம் என்ன? - Seithipunal
Seithipunal


மதிய உளவுத்துறை அமைச்சகத்தின் ஆலோசகரும் மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான விஜயகுமார் தனது பதவியை சில தினங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்கந்தி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு நெருக்கமானவர் ஆவார். இவர்களுடன் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். தனது பணி ஓய்வுக்கு பிறகு ஆறு வருடங்களாக மத்திய அரசின் சிறப்பு பணிக்கு அழைக்கப்பட்டு நக்சல்களுக்கு எதிரான வியூகம் வகுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். 

இந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்த கையோடு சென்னைக்கு கிளம்பி வந்துள்ளார் விஜயகுமார். மத்திய பாஜக அரசுக்கு மிக நெருக்கமானவர் என்பதால் அரசியல் ரீதியில் தமிழகத்தில் இவருடைய ஆலோசனை பெற பாஜக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் அடுத்த தமிழக பாஜக தலைவர் தேர்விற்கு இவருடைய பெயரும் பரிந்துரைக்கப்படலாம் எனவும் செய்திகள் பரவ தொடங்கியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பாஜக நிர்வாகிகளும் விஜயகுமாரை தமிழகத்திற்கு வரவேற்று பதிவுகளை எழுதி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க தமிழகத்தை ஆளும் திமுக தரப்பிலிருந்தும் இவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் நிலவி வரும் சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக திமுக அரசின் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இதன் காரணமாக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாரின் ஆலோசனை அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தமிழக அரசு கருதுவதாகவ தெரிய வருகிறது.

எனவே ஓய்வு பெற்ற விஜயகுமார் ஐபிஎஸ் அரசியலில் இறங்குவாரா அல்லது தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்குவாரா என்பது அவரின் முடிவில் தான் உள்ளது. ஏற்கனவே ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை அரசியலில் இறங்கியுள்ள நிலையில் தற்போது விஜயகுமாரின் தமிழக வருகை அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

politician or consultant What is the next incarnation of Vijayakumar IPS


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->