8ஆம் வகுப்பு மாணவியை புகைப்படம் எடுத்து பாலியல் தொல்லை குடுத்த போலீஸ்காரர் கைது! - Seithipunal
Seithipunal


கோவையில் பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும்  ஒரு மாணவனும் ஒரு மாணவியும் தனியாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.  அப்போது கோவில்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ரவி என்பவர் அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக தகவல் கூறப்படுகிறது. 

அவர் அந்த மாணவன் மாணவி இருவரும் தனியாக பேசிக்கொண்டிருப்பதை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து உள்ளார். பின்னர் அவர்களின் செல்போன் எண்ணையும் வாங்கியுள்ளார். இதனையடுத்து ரவிக்குமார் அந்த மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு தான் சொல்லும் இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.

அவர் கூறிய இடத்திற்கு சென்ற அந்த மாணவியிடம் காவலர் ரவிக்குமார் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பின்னர் அந்த மாணவியுடன் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி பெற்றோர்களுக்கும் கூறியதை அடுத்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் காவலர் ரவிக்குமார் மீது புகார் அளித்துள்ளனர்.

காவலர் ரவிக்குமார் மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. அதனையடுத்து  புகாரின் ரவி குமாரை மீது  போலீசார் போக்சோ  சட்டத்தில் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Policeman arrested for sexually harassing 8th class student


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->