திருவண்ணாமலை : சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பெரியப்பாவிற்கு போலீசார் வலைவீச்சு.!!
police search to man for sexuall harassment in thiruvannamalai
திருவண்ணாமலை : சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பெரியப்பாவிற்கு போலீசார் வலைவீச்சு.!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யார் பகுதியைச் சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு மாணவி. இவருடைய பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த பத்து ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால், அந்த சிறுமி தனது தாயுடன் சேர்ந்து வசித்து வருகிறார். இந்த, சிறுமி இருக்கும் வீட்டிற்கு பெரியப்பா உறவு கொண்ட கூலித் தொழிலாளி ஒருவர் அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுமியின் தாயார் அவரை அருகிலுள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் சிறுமியைச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் சிறுமியைத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்குச் சிறுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி இரண்டு மாதம் கர்ப்பிணியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் சம்பவம் குறித்து சிறுமியிடம் விசாரணை செய்தபோது, சிறுமி, வீட்டிற்கு வரும் பெரியப்பா அடிக்கடி மிரட்டி என்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்றுத் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலி தொழிலாளியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
English Summary
police search to man for sexuall harassment in thiruvannamalai