தேவரின் குருபூஜை விழா - கட்டுப்பாடுகளை அறிவித்தது காவல்துறை!! - Seithipunal
Seithipunal


முத்துராமலிங்க தேவர் 116 வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நாளை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற உள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

பசும்பொன்னில் இருக்கும் தங்க கவசம் அணிவிக்கப்பட்ட முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தேவர் குருபூஜை விழாவையொட்டி மதுரை மாநகரில் நாளை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

மதுரை மாநகருக்குள் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் நாளை காலை 6 மணி முதல் இரவு 10:30 மணி வரை செல்ல காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். விழாவிற்கு வரும் வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் தேவர் சிலை நோக்கி செல்ல அனுமதி இல்லை என காவல்துறை அறிவித்துள்ளது.

அதேபோன்று பசும்பொன் கிராமத்திற்குள் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்கள் உரிய அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விதிகளை மீறும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police restrictions to vehicles going to thevar guru poojai


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->