கள்ளக்குறிச்சியில் சோகம் : கைக்குழந்தை உள்பட மூன்று பேர் கழுத்தறுத்து கொலை.!
police rescue three peoples body in kallakurichi
கள்ளக்குறிச்சியில் சோகம் : கைக்குழந்தை உள்பட மூன்று பேர் கழுத்தறுத்து கொலை.!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நரிமேடு பகுதியைச் சேர்ந்த வளர்மதி என்பவரின் கணவர் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து வளர்மதி தனது மகன் மற்றும் எட்டு மாத கைக்குழந்தையுடன் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார்.

குடும்ப கஷ்டத்தை சமாளிப்பதற்காக வளர்மதி டெம்போ மூலமாக கிராமப்பகுதிகளுக்குச் சென்று காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் வளர்மதி வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வளர்மதியின் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு வளர்மதி மற்றும் அவரது பிள்ளைகள் கழுத்து அறுத்துக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் மூன்று பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், எட்டு மாத கைக்குழந்தை உள்பட மூன்று பேர் கழுத்தறுக்கப்பட்டு மர்ம முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
English Summary
police rescue three peoples body in kallakurichi