லாக்கப் மரணம் | நாட்டிலேயே தமிழகம் 4 இடம்! முதலிடத்தில் இந்த மாநிலமா?!
police Lock up Death report india and Tamilnadu state
கடந்த 5 ஆண்டுகளில் 80 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ள குஜராத் மாநிலம் நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம் 40 மரணங்களுடன் 4 வைத்து இடத்தில உள்ளது.
மாநிலங்களவையில் நாடு முழுவதும் நடந்த லாக்கப் மரணங்கள் குறித்த புள்ளி விவரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 2017 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2022 மார்ச் 31ம் தேதி வரை நடந்த லாக்கப் மரணங்களின் நாட்டிலேயே அதிகபட்சமாக,
குஜராத் மாநிலத்தில் 80 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் 76 லாக்கப் மரணங்களும் நடந்துள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 41 லாக்கப் மரணங்களும் நடந்துள்ளன.
தமிழ்நாடு மாநிலத்தில் 40 லாக்கப் மரணங்களும் நடந்துள்ளன.
பீஹார் மாநிலத்தில் 38 லாக்கப் மரணங்களும் நடந்துள்ளன.

குறைந்தபட்சமாக சிக்கிம் மற்றும் கோவாவில் 2017-20 வரை ஒரு லாக்கப் மரணம் கூட பதிவாகவில்லை. பின்னர் தலா ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது
2017-18 காலகட்டத்தில் 146 லாக்கப் மரணங்களும்,
2018-19 காலகட்டத்தில் 136 லாக்கப் மரணங்களும்,
2019-20 காலகட்டத்தில் 112 லாக்கப் மரணங்களும்,
2020-21 காலகட்டத்தில் 100 கஸ்டடி மரணங்களும்,
2021-22 காலகட்டத்தில் 175 லாக்கப் மரணங்களும் நடந்துள்ளது.
இந்த லாக்கப் மரங்களின் வழக்குகளில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் 201 வழக்குகளில் ரூ.5.80 கோடி நிவாரணம் கொடுக்க உத்தரவிட்டுள்ளது.
English Summary
police Lock up Death report india and Tamilnadu state