தரமற்ற குடிநீர் வழங்குவதாக புகார் எதிரொலி ..குடிநீர் கள நீர் பரிசோதனைப் பெட்டிகளை வழங்கிய முதல்வர்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மொத்தமுள்ள 10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு இரண்டாம்கட்டமாக 123 குடிநீர் கள நீர் பரிசோதனைப் பெட்டிகளை முதலமைச்சர்  ரங்கசாமி  வழங்கினார்.

மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி ஜல்ஜீவன் மிஷன் (JJM) திட்டத்தின்கீழ் புதுச்சேரி அரசு, உள்ளாட்சித்துறையின் மூலம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மொத்தமுள்ள 10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு இரண்டாம்கட்டமாக 123 குடிநீர் கள நீர் பரிசோதனைப் பெட்டிகளை (Field Testing Kit-FTK) கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம நீர் மற்றும் துப்புரவுக் குழு (VWSC) உறுப்பினர்களுக்கு முதலமைச்சர்  ரங்கசாமி  வழங்கினார்.

அப்போது இந்த நிகழ்வில்  குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன், உள்ளாட்சித் துறை இயக்குநர்  சக்திவேல், துணை இயக்குநர் சவுந்திரராஜன், உள்ளாட்சித் துறை செயற்பொறியாளர் தநாகராஜன், ஜல்ஜீவன் மிஷன“ ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் ஆகியோர் இந்நிகழ்ச்சியின்போது உடனிருந்தனர்.

இந்த குடிநீர் களப் பரிசோதனை பெட்டியின் மூலமாக குடிநீரில் உள்ள pH, காரத்தன்மை, கடினத்தன்மை, குளோரைடு, ஃப்ளோரைடு, அம்மோனியா, நைட்ரைட் நைட்ரேட், இரும்பு, பாஸ்பேட், குளோரின், TDS, 12 வகையான தரக் குறைபாடுகளை அந்த இடத்திலே கண்டறிய முடியும்.


இந்தநிலையில் இஎஸ்ஐ மருத்துவமனையின் தரத்தை உயர்த்து மத்திய அமைச்சரிடம் சபாநாயகர் கோரிக்கை விடுத்தார் .

டெல்லியில் மத்திய தொழிலாளர் நலத்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டாவியாவை சபாநாயகர் செல்வம் அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது புதுச்சேரியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் தரத்தை உயர்த்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் மேலும் புதுச்சேரியில் உள்ள விளையாட்டு வீரர்களின் நலன் கருதி புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் புதிய விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கு மத்திய அரசு சிறப்பு மானிய நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Complaint about the supply of substandard drinking water Chief Minister who provided water testing kits


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->