பாலியல் புகார்! போலீசார் மீது துப்பாக்கி சூடு... ஆம் ஆத்மீ எம்எல்ஏ தப்பி ஓட்டம்!
Punjab AAP MLA Harmeet Singh firing shot
பஞ்சாபில் முதல் மந்திரி பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ஹர்மித் சிங் பதன்மஜ்ரா, கடந்த தேர்தலில் சானோர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆகினார்.
சமீபத்தில் ஜிரக்பூரை சேர்ந்த ஒரு பெண் அவர்மீது பாலியல் புகார் அளித்ததால், போலீசார் வழக்கு பதிவு செய்து ஹர்மித் சிங்கை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, தன்னுடன் இருந்த உதவியாளர்களுடன் சேர்ந்து போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவல் தப்பிச் சென்ற சம்பவம் பஞ்சாப் அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக் கட்சியின் எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட இந்த வழக்கு, ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
தலைமறைவாக உள்ள ஹர்மித் சிங்கை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் அவரது இருப்பிடத்தை கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
English Summary
Punjab AAP MLA Harmeet Singh firing shot