நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் நாடு திருப்புகிறார்; காரணம் என்ன..? - Seithipunal
Seithipunal


10-வது டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் D இல்  நியூசிலாந்து அணி இடம்பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணியில், இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் இன்று சொந்த நாடு திரும்புகிறார் என்ற அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். ஏனெனில், பெர்குசனின் மனைவி எம்மா (Emma) நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால், இவருக்கு எப்போது வேண்டுமென்றாலும் குழந்தை பிறக்கலாம். 

இதன்காரணமாக, தனது முதல் குழந்தை பிறக்கும்போது மனைவியின் அருகில் இருக்க பெர்குசன் விரும்புவதாகவும், இதனால் அவர் சொந்த நாடு திரும்புகிறார் என தலைமை பயிற்சியாளர் ராப் வால்டர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணி 'டி' பிரிவில் இடம் பிடித்துள்ள, ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகளை வீழ்த்தியுள்ளது. நேற்று நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது. இந்த நிலையில், 04 புள்ளிகளுடன் குரூப் 'டி' பிரிவில் 02-வது இடத்தில் உள்ளது.

நியூசிலாந்து அணி, வருகிற 17-ந்தேதி கனடாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நியூசிலாந்து சூப்பர் 08 சுற்றுக்கு முன்னேறும். அப்போது பெர்குசன் அணியில் இணைந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 34 வயதான பெர்குசன் 03 போட்டிகளில் 108 ரன்கள் விட்டுக்கொடுத்து 04 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New Zealand fast bowler Ferguson is returning home


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->