இமயமலையில் ஆன்மிக திருவிழா…! - கேதர்நாத், பத்ரிநாத் கோவில் கோவில்கள் திறப்பு தேதிகள் வெளியீடு...!
Spiritual festival Himalayas Kedarnath Badrinath temple opening dates released
உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கேதர்நாத் கோவில், கடும் குளிர் காலத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு மாதங்கள் மூடப்பட்டிருக்கும். தற்போது வடஇந்தியாவில் நிலவும் பனிப்பொழிவு மற்றும் கடுங்குளிர் காரணமாக கோவில் தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குளிர் காலம் தணிந்த பின், வரும் ஏப்ரல் 22-ந்தேதி மீண்டும் பக்தர்களுக்காக கோவில் கதவுகள் திறக்கப்படும் என ஸ்ரீ பத்ரிநாத்-கேதர்நாத் கோவில் கமிட்டி மக்கள் தொடர்பு அதிகாரி ஹரிஷ் கவுர் அறிவித்துள்ளார்.
மேலும், கோவில் திறப்பதற்கான மங்களகரமான தேதி மற்றும் நேரம் மகா சிவராத்திரி தினத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இந்த புனிதத் தலமான கேதர்நாத், திறப்பு நாளில் 9.5 குவிண்டால் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தலைமை பூசாரி, உள்ளூர் எம்.எல்.ஏ., கோவில் கமிட்டி நிர்வாகிகள், மதத் தலைவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகளுடன் நடை திறக்கப்படும்.அதேபோல், பத்ரிநாத் கோவில் ஏப்ரல் 23-ந்தேதி திறக்கப்பட உள்ளது.
கங்கோத்ரி கோவில் மற்றும் யமுனோத்ரி கோவில் ஆகிய புனிதத் தலங்கள் ஏப்ரல் 19-ந்தேதி பக்தர்களை வரவேற்கவுள்ளன.இமயமலை மடியில் மீண்டும் தொடங்கும் இந்த ஆன்மிகப் பயணம், ஆயிரக்கணக்கான யாத்திரீகர்களுக்கு பக்தி பரவசத்தை ஏற்படுத்தவுள்ளது.
English Summary
Spiritual festival Himalayas Kedarnath Badrinath temple opening dates released