‘மருத்துவர்’ இல்லை ...12 படிக்கும் மாணவன்...! - தவறான அறுவை சிகிச்சையில் இளம் தாய் பலி...!
Not a doctor 12th grade student Young mother dies wrong surgery
உத்தர பிரதேசம் லக்னோ அருகே உள்ள அம்பேத்கர் நகரின் புக்கியா கிராமத்தில் “நவஜீவன்” என்ற பெயரில் தனியார் கிளினிக் ஒன்று அமைதியாக செயல்பட்டு வந்தது. ஆனால் அந்த கிளினிக்கில் நடந்த சிகிச்சை அலட்சியம், ஒரு இளம் தாயின் உயிரையே பறித்த துயரச் சம்பவமாக மாறியுள்ளது.

கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி, 28 வயதான பிரியங்கா என்ற கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காக அங்கு அனுமதிக்கப்பட்டார். அதிர்ச்சியாக, உரிய மருத்துவ தகுதி இல்லாத யோகேஷ் வர்மா (32) என்ற பி.ஏ. பட்டதாரியும், 12ஆம் வகுப்பு மாணவர் சுப்ளம் விஸ்வகர்மாவும் சேர்ந்து அவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சையில் பெண் குழந்தை பிறந்தது.ஆனால் சிகிச்சைக்குப் பிறகு பிரியங்காவிற்கு கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டதால் உடல்நிலை வேகமாக மோசமடைந்தது.
உடனடியாக லக்னோவில் உள்ள பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றாலும், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.மேலும் விசாரணையில், “நவஜீவன்” கிளினிக் கடந்த 5 ஆண்டுகளாக எந்த அனுமதி அல்லது அதிகாரப்பூர்வ பதிவும் இன்றி சட்டவிரோதமாக இயங்கி வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து அதிகாரிகள் கிளினிக்கிற்கு சீல் வைத்து மூடியுள்ளனர்.மேலும், சிகிச்சை செய்ததாக தெரிவிக்கப்படும் யோகேஷ் மற்றும் சுப்ளம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி யோகேஷின் தந்தை ஓய்வு பெற்ற வார்டு பாய் என்பதால், அவரிடம் உதவியாளராக இருந்த அனுபவத்தை வைத்து தான் இத்தகைய மருத்துவச் செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், மருத்துவமனையை நடத்தி வந்த ரூபி என்ற பெண் தற்போது தலைமறைவாக உள்ளார்.
அவரை பிடிக்க காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.இந்த சம்பவம், அனுமதியில்லா கிளினிக்குகள் குறித்து மீண்டும் பொதுமக்களிடம் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Not a doctor 12th grade student Young mother dies wrong surgery