இந்தியா - பாகிஸ்தான் இன்றைய போட்டிக்கான வணிக மதிப்பு ரூ.1800 கோடி முதல் ரூ.2200 கோடி ; ஐ.சி.சி வருவாய் பகிர்வில் இந்தியா முதலிடம்..!
India tops ICC revenue sharing with Rs 2079 crore for BCCI
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) வருவாயின் பெரும் பங்கு பி.சி.சி.ஐ. மூலமே கிடைக்கிறது. ஏனெனில், உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பாக பி.சி.சி.ஐ உள்ளது. இன்று கோடிக்கணக்கான ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலக கோப்பை போட்டி இன்று கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியின் வணிக மதிப்பு சுமார் ரூ.1800 கோடி முதல் ரூ.2200 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, உலகளாவிய அளவில், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு 70 சதவீதத்துக்கும் மேலாக வருமானம் கிடைக்கிறது. 2024 முதல் 2027 வரையிலான கால கட்டத்தில் ஐ.சி.சி.யின் வருவாயில் 38.5 சதவீதம் பி.சி.சி.ஐ.க்கு கிடைக்கிறது. தோராயமாக ரூ.2079 கோடி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைக்கிறது.
அத்துடன், ஐ.சி.சி.யின் வருவாயில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பங்கு 5.75 சதவீதம் ஆகும். அதாவது அவர்களுக்கு ரூ.310 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. குறிப்பாக, இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டியில்தான் அதிக அளவில் வருவாய் குவிகிறது. இந்த வருவாயை கருத்தில் கொண்டு இரு அணிகளும் நிதி நிலைப்பாட்டில் பயன் அடைந்து வருகின்றது.
English Summary
India tops ICC revenue sharing with Rs 2079 crore for BCCI