'முன்கூட்டியே உரிமைத் தொகை வழங்கியதால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்; முதல்வரை அப்பா, அண்ணன் என்று பாசமாக அழைக்கின்றனர்'; உதயநிதி ஸ்டாலின் பேட்டி..! - Seithipunal
Seithipunal


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை முன்கூட்டியே வழங்கப்பட்டதால் பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  மதுரையில் நேற்று மாலை, திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது:

காங்கிரசுடன் கூட்டணி இறுதி செய்வது குறித்து தலைவர் (ஸ்டாலின் ) முடிவெடுப்பார் என்றும், கடந்தமுறை போல இந்த முறையும் 170 இடங்களில் திமுக போட்டியிடுவது குறித்தும் தலைவர் முடிவெடுப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஓட்டுப்போடுவது குறித்து மக்கள் முடிவு செய்வார்கள். முதல்வர் வழங்கிய ரூ.05 ஆயிரம் நிதி தேர்தலுக்காக கொடுத்தது இல்லை என்றும், பாஜ மூலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு வரப்போகிறது. அது நிறைய பேருக்கு தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, மத்திய பிரதேசத்தில் ஒருமுறை இதேபோல நீதிமன்ற அனுமதி மூலம் திட்டத்தை நிறுத்தினார்கள் என்றும், அதுபோல இங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை நிறுத்தவேண்டும் என பாஜ மற்றும் அதிமுகவினர் முயற்சி செய்தார்கள் என்று பேசியுள்ளார்.

மேலும், அந்த மாநிலத்தில் ஏற்பட்ட நிலைமை இங்கு வரக்கூடாது என்பதற்காக தலைவர் முன்னேற்பாடாக மகளிருக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நிதி வழங்கப்பட்டமைக்கு அடுத்து, இதற்காக, என்னிடம் ஏராளமான பெண்கள் முதல்வரிடம் நன்றி சொல்லுங்கள் என்று கூறியதாகவும், அதுவும் முதல்வரை அப்பா என்றும் அண்ணன் என்றும் உறவாக குறிப்பிட்டு நன்றி சொல்லுங்கள் என்று தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இது பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், விஜய் கூட்டங்களில் உயிரிழப்பு நடப்பது குறித்து கேட்கிறீர்கள். இதை யாரிடம் கேட்கணும்..? என்னிடமா கேட்கணும்..? உண்மையா இதுக்கு யார் பொறுப்பேற்று, யார் பதில் சொல்லணும்..? அறிஞர் அண்ணாவே விஜய்யை பார்த்து தான் திமுகவையே ஆரம்பித்தார் என்று கூட சொல்வார் என்று உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udhayanidhi Stalin says women are happy with advance payment of rights


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->