பூரி கடற்கரையில், தியான நிலையில் மகா சிவன் ; பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் கைவண்ணம்..! - Seithipunal
Seithipunal


சிவனுக்கு 05 சிவராத்திரிகள் உள்ளன. அதாவது யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, மாச சிவராத்திரி, ஆண்டுதோறும் வரும் மகா சிவராத்திரி ஆகும்.

இதில், மாசி மாதத்தில் கிருஷ்ணபட்சத்தில் அமாவாசைக்கு முதல் நாள் சதுர்தசியில் வரும். ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துவதே இந்த சிவராத்திரியின் நோக்கமாகும். அதாவது, உணவையும் தூக்கத்தையும் கட்டுப்படுத்தி சிவனை மெய்யன்போடு வழிபடுவதாககும். 

இந்த மகா சிவராத்திரி என்பது இந்து மதத்தின் மிக முக்கியமான ஆன்மிகத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு, பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரமிக்கத்தக்க மணல் சிற்பங்களை உருவாக்குவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டும் (2026) அவர் தனது கலைத்திறமையால் சிவபெருமானின் பிரம்மாண்டமான மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். சிவ பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் இந்த மணல் சிற்பம் பெரிதும் கவர்ந்துள்ளது.  அதாவது, சிவபெருமானின் தியான நிலை மற்றும் லிங்க வடிவிலான சிற்பத்தை பல டன் மணலைப் பயன்படுத்தி அவர் உருவாக்கியுள்ளார்.

சிற்பத்தின் கீழ், ஹர ஹர மகாதேவ் என்றும் மகாசிவராத்திரி வாழ்த்துகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Famous sand artist Sudarshan Pattnaiks handiwork depicts Lord Shiva in meditation on Puri beach


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->