T20 WC 2026; மீண்டும் பாகிஸ்தானுடன் கைகுலுக்க மறுத்துள்ள இந்தியா அணி..!
India team refuses to shake hands with Pakistan again
10 வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா ,மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைய லீக் ஆட்டத்தில், 27 வது போட்டியாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கொழும்பு பிரேமதாச மைதானத்தில் பல பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டியில், டாஸ் வீசிய போது பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி - இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மீண்டும் கைகுலுக்க மறுத்துள்ளனர்.
இந்த ஆட்டத்துக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கைகுலுக்குவது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய னியின் கேப்டன் சூர்யகுமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், பொறுத்திருந்து பாருங்கள் என சூர்யகுமார் யாதவ் சொல்லி இருந்தார். இந்நிலையில், மீண்டும் பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்க சூர்யகுமார் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுடன் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை மாதிரியான பல அணிகள் பங்குபெறும் தொடர்களில் மட்டும் ஆடுவதென்பதும், இருதரப்பு தொடர்களை தவிர்ப்பதும் இந்திய அரசின் கொள்கையாக உள்ளது. இந்த சூழலில் கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரின் போது மூன்று முறை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடி இருந்தது. அப்போது பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்துவிட்டனர். அது பேசுபொருளான நிலையில், இன்று வீரர்கள் கைகுலுக்க மறுத்துள்ளனர்.
English Summary
India team refuses to shake hands with Pakistan again