இந்திய அணியின் வெற்றியின் போக்கை மாற்றிய ரவி பிஷ்னோய்; ஜேக்கப் பெத்தேல் அபாரம்; இலகு வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி..!
India team suffered a shock defeat in the T20 series against England
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மான்செஸ்டரில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 191 ரன்கள் எடுத்து 04 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினார்.
இவர் தனது 15 வயது மற்றும் 99 நாட்களில் அறிமுகமாகி, இந்தியாவின் மிக இளம் வயது சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆனார். அவர் தனது முதல் இன்னிங்ஸில் இரண்டு சிக்ஸர்கள் உட்பட 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக அபிஷேக் சர்மா 43, இஷான் கிஷன் 49, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 37 ரன்கள் எடுத்தனர். இறுதியில் திலக் வர்மா 11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து அணி சார்பில் சாம் கரண் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து 191 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19 ஓவரில் 06 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. அணி சார்பில் ஜேக்கப் பெத்தேல் ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடி வெற்றிக்கு வித்திட்டார்.
டெத் ஓவரில் ரவி பிஷ்னோயின் 29 ரன்கள் எடுத்து அவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இறுதியில் ஜோப்ரா ஆர்ச்சரும் கடைசி ஓவரில் 07 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அணியின் கேப்டன் ஹாரி புரூக் மற்றும் டாம் பேன்டன் தலா 39 ரன்கள் எடுத்தனர். அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்காக 03 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
English Summary
India team suffered a shock defeat in the T20 series against England