ஈரோட்டில் அதிர்ச்சி; மனைவியுடன் நெருக்கமாக பழகிய தொழிலாளி; நண்பர்கள் உதவியுடன் கல்லால் அடித்துக்கொலை; 03 பேர் கைது..!
3 people arrested in Erode for stoning to death a worker who was having an affair with his friends wife
ஈரோட்டில் நண்பரின் மனைவியுடன் நெருங்கி பழகியதால் கல்லால் தாக்கி படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 03 பேரை கைது செய்துள்ளனர்.
ஈரோடு வெண்டிபாளையம் காந்திஜி வீதியை சேர்ந்தவர் 26 கோபிநாத் தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவர் தற்போது ஈரோடு மணல்மேடு பகுதியில் அவரது மனைவி மஞ்சு மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஈரோடு வெண்டிபாளையம் காந்திஜி வீதியில் வசிக்கும் விவேக் (29) என்பவரது மனைவியுடன் பேசி பழகி வந்துள்ளார். இதையறிந்த விவேக், கோபிநாத்தை முதலில் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், கோபிநாத் கடந்த 29-ஆம் தேதி ஈரோடு அடுத்த சோலாரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடிக்க சென்றுள்ளார். இதையறிந்த விவேக், தனது நண்பர்களிடம் சொல்லி கோபிநாத்தை அடித்து உதைக்குமாறு கூறியுள்ளார்.

அதன்படி, விவேக்கின் நண்பர்களான சரவணன் (39), சதீஷ் (39) ஆகிய இருவரும், டாஸ்மாக் பாரில் மது அருந்தி கொண்டிருந்த கோபிநாத்திடம், விவேக் மனைவியிடம் ஏன் பேசிக்கொண்டிருக்கிறாய்? எனக் கேட்டு தகராறு செய்துள்ளனர். அத்துடன், அவரை தகாத வார்த்தைகள் பேசியதோடு, டாஸ்மாக் கடை அருகே உள்ள காலியிடத்திற்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அத்துடன், கீழே கிடந்த கல்லை எடுத்தும் தலை மற்றும் முகத்தில் தாக்கியுள்ளனர். அப்போது அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்து இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த கோபிநாத்தை மீட்டு அங்கிருந்தவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு கோபிநாத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன், சதீஷ் மற்றும் விவேக் ஆகிய 03 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோபிநாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து கைதான 03 பேர் மீதும் கூடுதலாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கோபிநாத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
English Summary
3 people arrested in Erode for stoning to death a worker who was having an affair with his friends wife