ஆட்சியில் பங்கு தரவில்லை என்றால் தவெக-காங்கிரஸ் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டை தட்டி தூக்கலாம்; காங்கிரஸ் நிர்வாகி அதிரடி..!
Congress executive says TVK and Congress alliance can lift Tamil Nadu
வரும் சட்டமன்ற தேர்தலில், தவெக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால் தமிழ்நாட்டை தட்டி தூக்கிவிடலாம் என்று காங்கிரஸ் நிர்வாகி வேல்முருகன் பேசியுள்ளார். திமுக ஆட்சியில் பங்கு தராவிட்டால் தவெக கூட்டணிக்கு காங்கிரஸ் செல்ல வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் முன்னிலையில் காங்கிரஸ் நிர்வாகி பேசியுள்ளார்.
மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் உலகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில், விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த செயற்குழு கூட்டத்தில் பேசியவர்கள் ஆட்சியில் பங்குதாராவிட்டால் தவெக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என பேசினர்.

அப்போது காங்கிரஸ் நிர்வாகி வேல்முருகன் பேசுகையில், ஊருக்கு ரெண்டு பேர வச்சு கட்சி நடத்துவதாக காங்கிரஸை திமுகவினர் கிண்டல் செய்கின்றனர். ஆட்சியில் பங்கு கேட்பது காங்கிரஸ் கட்சியின் உரிமை என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், திமுக மைனாரிட்டி அரசு நடத்திய போது காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரித்தது என்றும், அப்போது ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. ஆனால், இப்போது கேட்கிறோம். காய் அவர்கள் தர வேண்டும். தராவிட்டால் தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
தேர்தலில், விஜய் தனித்து நின்றாலும் 30 சதவீத வாக்குகளைப் பெறுவார் என்று குறிப்பிட்டுள்ளதோடு, அவருடன் காங்கிரஸ் சேர்ந்தால் தமிழகத்தை தட்டித் தூக்கிவிடலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், விஜய் - காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் தமிழகத்தில் பொன்னான எதிர்காலத்தை உருவாக்கலாம். இது ஒரு நல்ல சந்தர்ப்பம். வரும் ஸ்ரீதேவியை எட்டி உதைக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

விஜய் காங்கிரஸை அழைக்கிறதாகவும், நமக்கு போகும் நினைப்பு இல்லைதான். ஆனால் திமுக வேண்டும் என்றே நம்மை தள்ளுகிறது என்று கூறியுள்ளார். ஆட்சியில் பங்கு தாருங்கள் என மாணிக்கம் தாகூர் கேட்டால் அவருக்கு பதிலளிக்க முடியாது என்கிறார்கள். மாணிக்கம் தாகூர் மத்திய அமைச்சருக்கு இணையானவர். மத்திய அமைச்சர் முதல்வர் பதவிக்கு இணையானது என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், அவருக்கு பதிலளிக்க மறுக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும் என நாங்களும் ஆசைப்படுகிறோம் ஆனாலும், அதற்கு அவருக்கு நேரம் நல்லாயிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Congress executive says TVK and Congress alliance can lift Tamil Nadu