வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழா; மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்பு..! - Seithipunal
Seithipunal


கடந்த 2024-ஆம் ஆண்டில் பிரதமர் ஹசீனா மாணவர்கள் போராட்டத்தை அடுத்து, ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதன் பிறகு அந்நாட்டில் முதல் முறையாக கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. கட்சி மொத்தம் உள்ள 300 இடங்களில் 209 இடங்களை அபாரமாக கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது.

இதனையடுத்து, அவர் வங்கதேச பிரதமராக வரும் செவ்வாய்க்கிழமை பதவியேற்க உள்ளார். அன்று மதியம் நாடாளுமன்றத்தின் தெற்கு மண்டபத்தில் இந்த விழா நடைபெறவுள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுடன் சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மலேசியா, புருனே, இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய 13 நாடுகளுக்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக இந்தியப் பிரதமர் மோடியையும் மரியாதை நிமித்தமாக இவ்விழாவிற்கு அழைப்போம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.என்.எம். எஹ்சானுல் ஹக் மிலன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், வங்கதேசத்தின் புதிய பிரதமராக தேர்வான தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழாவில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்பார் என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அன்றைய நாள் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்தியா வரவுள்ளதால், பிரதமர் நரேந்திர மோடியால் விழாவில் பங்கேற்க முடியவில்லை என  கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Om Birla attends Tariq Rahmans swearing in ceremony as Bangladesh's new Prime Minister


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->