வாங்கலாமா...? வேண்டாமா...? -ரஷியா கச்சா எண்ணெய் குறித்து ஜெய்சங்கர் விளக்கம்...! - Seithipunal
Seithipunal


ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை மேற்கொண்டது. ரஷிய எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இந்தியா தரப்பில் இதுவரை தெளிவான உறுதிப்பாடு வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.

இதற்கிடையில் ஜெர்மனியில் நடைபெற்ற மியூனிக் பாதுகாப்பு மாநாடுவில் இந்த விவகாரம் முக்கிய பேச்சுப் பொருளாக மாறியது. அங்கு பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, “ரஷிய எண்ணெய் மீது கூடுதல் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவுடன் நடந்த கலந்துரையாடலில், ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்தும் உறுதிப்பாட்டை பெற்றுள்ளோம்” என தெரிவித்தார்.ஆனால் அதே மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அந்த கூற்றை நேரடியாக உறுதி செய்யவோ மறுக்கவோ இல்லாமல், நிதானமான பதிலை அளித்தார்.

“இந்தியாவின் முடிவுகள் அனைத்தும் மூலோபாயத் தன்னாட்சியை அடிப்படையாகக் கொண்டவை. எரிசக்தி கொள்முதல் அரசியல் அழுத்தத்தால் அல்ல; கிடைக்கும் தன்மை, விலை மற்றும் அபாய மதிப்பீட்டின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படும்,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும், “எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு பொருத்தமான மற்றும் லாபகரமான முடிவுகளைத் தான் எடுக்கும்” என தெரிவித்து நேரடி பதிலைத் தவிர்த்தார்.இதற்கிடையே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு வெனிசுலாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா அனுமதி வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே சமயம், ரஷிய எண்ணெய் கொள்முதல் தொடர்ந்தால் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட குறைந்த வரிச்சலுகையை மீண்டும் உயர்த்துவோம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருப்பதும், இந்த விவகாரத்தை மேலும் அரசியல் பதற்றத்துக்குள் தள்ளியுள்ளது.

மொத்தத்தில், உலக அரசியல் அழுத்தம் – எரிசக்தி தேவை – பொருளாதார கணக்கு என மூன்று முனைகளில் இந்தியா எடுக்கும் முடிவு தற்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Should I buy it Should I not Jaishankar explanation Russian crude oil


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->