பல முறை கூறியும் கேட்க்காத மனைவி..கடைசியில் கணவன் எடுத்த விபரீத முடிவு!  - Seithipunal
Seithipunal


பல முறை கூறியும் அதனை  கண்டு கொள்ளவில்லை என்பதால் ரீல்ஸ் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட மனைவியை   கணவன் ஆத்திரத்தில் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

டெல்லியின் நஜப்கார் பகுதியை சேர்ந்தவர் இ-ரிக்சா ஓட்டுநர் அமன்,35 வயதான இவருக்கு  2 மகன்கள் உள்ளனர். இவருடைய மனைவி ரீல்ஸ் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்திருக்கிறார்.இந்த தம்பதி பழைய ரோஷன்புரா பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். 

இந்த நிலையில், மனைவி ரீல்ஸ் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது கணவர் அமனுக்கு பிடிக்கவில்லை. இதனை பல முறை கூறியும் அதனை மனைவி கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், இன்று அதிகாலை  நஜப்கார் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் , மனைவியை அமன் கொலை செய்த சம்பவம் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி காவல் துறை அதிகாரி ஒருவர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கூறும்போது, , மனைவி ரீல்ஸ் எடுப்பதற்கு அமன் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார். அவருக்கு 6 ஆயிரம் பின்தொடர்வோர் உள்ளனர் என்றும் கணவரிடம் பெருமையுடன் கூறியுள்ளார்.ஆனால், அவரோ தொடர்ந்து சமூக ஊடகங்களில் ரீல்சுகளை வெளியிட்டு வந்திருக்கிறார். 

இந்தநிலையில்தான்  இது தொடர்பாக அந்த தம்பதியினரிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இன்று அதிகாலையும் இதுபோன்று வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறில் முடிந்தது.இதையடுத்து  மனைவியை கழுத்தை நெரித்து கொன்றார்.அதனை தொடர்ந்து கணவன் அமன்  பின்னர், தூக்கு போட்டும், விஷம் குடித்தும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஆனால், அதற்குள் போலீசார் வந்து அவரை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறினார் .மேலும் இது தொடர்பாக  அண்டை வீட்டுக்காரர்கள், உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The wife who did not listen even after being told many times finally the husband made an extreme decision


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->