டெல்லியில் பரபரப்பு.! மகளின் காதலனை கத்தியால் குத்திக் கொன்ற குடும்பத்தினர்..!!  - Seithipunal
Seithipunal


டெல்லியில் பரபரப்பு.! மகளின் காதலனை கத்தியால் குத்திக் கொன்ற குடும்பத்தினர்..!! 

நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள ஜாஃப்ராபாத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்யும் சி.சி.வி.டி. காட்சிகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தெரிவித்ததாவது:- 

"கொலை செய்யப்பட்ட நபர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இளம்பெண்ணின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சல்மான் அவரது நண்பர்களுடன் ஜாஃப்ராபாத் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது அந்த இளம்பெண்ணின் தந்தை, சகோதரர் இரண்டு பேர் என்று மூன்று பேரும் சேர்ந்து அந்த வாலிபரை வழி மறித்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்த தாக்குதலில், அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதைப்பார்த்த குற்றவாளிகள் உடனடியாக அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மூன்று பேரை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police investigation of young man kill in delhi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->