கள்ளக்குறிச்சியில் தண்ணீரில் மிதந்த ஆண் சடலம் - கொலையா? தற்கொலையா? விசாரணையில் போலீசார்.!
police investigation of man murder case in kallakurichi
கள்ளக்குறிச்சியில் தண்ணீரில் மிதந்த ஆண் சடலம் - கொலையா? தற்கொலையா? விசாரணையில் போலீசார்.!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் கூட்டு சாலையில் சிறு பாலம் ஒன்று உள்ளது. இந்தப் பாலத்தின் அடியில் வாலிபர் ஒருவரின் உடல் தண்ணீரில் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் படி போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில், இறந்து கிடந்தவர் எஸ். குச்சிப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் பெயர் ஜெயராமன் என்பதும் தெரிய வந்தது.
மேலும், இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது என்றும் கருத்து வேறுபாடு காரணமாக மூன்றாண்டுகளாக மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இருப்பினும் போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
police investigation of man murder case in kallakurichi