அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த காவல் துறை - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் பணி நிமித்தமாக நாங்குநேரி வந்த போலீஸ்காரர், அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்ததால், நடத்துனருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், போலீசார் சீருடையில் நீதிமன்றம் உள்ளிட்ட நீண்ட தூரம் செல்லும் போது, சம்பந்தப்பட்ட  காவல் நிலையங்களில் வாரன்ட் கடிதத்துடன் செல்ல வேண்டும்' என்பதும் உத்தரவாக உள்ளது. 

ஆகவே, நேற்றைய சம்பவம், போக்குவரத்து துறைக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னை- புதுச்சேரி செல்லும் பேருந்து தாம்பரத்தில் 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதற்காக, தாம்பரம் போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம் விதித்தனர். 

மேலும், சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து துறைக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பரபரப்பாக பதிவிட்டு வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police fine to government buses in chennai


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->