காவலர் பணிக்கான தேர்வு எப்போது? - வெளியானது முக்கிய அறிவிப்பு.!!
police exam date announce
காவலர் பணிக்கான தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல்,180 சிறைக் காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில், காவலர் பணிக்கான தேர்வு தேதியை தேசிய சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன் படி விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் நாளை முதல் செப்டம்பர் 21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 9-ந்தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
police exam date announce