"வாட் ப்ரோ... இட்ஸ் வெரி Wrong ப்ரோ..." வரவன் போறவன் எல்லாம் அதிமுக தலைவர்கள் படத்தை பயன்படுத்தினால் எப்படி? விஜயை கண்டித்த இபிஎஸ்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநாடு இன்று மதுரை மாவட்டம் பாரபத்தியில் 500 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. கடந்த 2024 அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டை தொடர்ந்து, இந்த இரண்டாவது மாநாட்டும் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மாநாடு நடைபெறும் மேடையில் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் விஜய் ஆகியோரின் படங்கள் இணைத்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அண்ணா, எம்ஜிஆர் நடுவில் விஜய் இருப்பது போல் பேனர் அமைக்கப்பட்டிருப்பது அரசியல் சூழலில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை மாநாட்டை மறைமுகமாக விமர்சித்துள்ளார். ராணிப்பேட்டையில் நடைபெற்ற “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணத்தில் பேசிய அவர்,

“ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான்.திமுக என்பது இனி ஒரு கட்சி அல்ல, கார்பரேட் கம்பெனியாக மாறியுள்ளது.மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காக ஸ்டாலின் முகாமை நடத்துகிறார்.திமுக குடும்பத்துக்காக பாடுபடும் இயக்கம்; அதிமுக மக்களுக்காக பாடுபடும் இயக்கம்” என்று வலியுறுத்தினார்.

மேலும், “அதிமுக ஆட்சி இருந்தபோது சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. ஆனால் இன்று தினமும் கொலை சம்பவங்கள் ஊடகங்களில் வெளியாகின்றன. இது மோசமான ஆட்சி என்பதற்கான சான்று. 2026 தேர்தல் என்பது, தமிழகத்தை ஒரு குடும்பத்தின் சுரண்டலிலிருந்து காப்பாற்றும் தேர்தல்” எனவும் தெரிவித்தார்.

அத்துடன், “புதிதாக கட்சி தொடங்குபவர்கள் அதிமுக தலைவர்களின் படங்களை பயன்படுத்துகிறார்கள். நமது தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர்கள். அவர்களின் பெயரை வைத்து அரசியல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறி, விஜயை மறைமுகமாக விமர்சித்தார்.

இதனால், மதுரையில் நடைபெறும் தவெக இரண்டாவது மாநாட்டும், அதனைச் சுற்றியுள்ள அதிமுக – திமுக – விஜய் அரசியல் குறுக்கீடுகளும், தமிழ்நாட்டு அரசியல் சூழலை சூடுபடுத்தி விட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What if AIADMK leaders use the picture of Varavan Poravan EPS condemns Vijay


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->