வங்கியில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் இயங்கும் பொதுத்துறை வங்கிகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்றைக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

கல்வித் தகுதி :- இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு : 20 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : முதல்நிலை எழுத்துத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு

முதல்நிலைத் தேர்வு மையங்கள் : சென்னை, சேலம், ஈரோடு, கோவை, தருமபுரி, திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி, நாமக்கல், திருப்பூர், வேலூர், விருதுநகர்.

முதன்மைத் தேர்வு மையங்கள் : சென்னை, சேலம், கோவை, மதுரை, நாமக்கல், திருச்சி, நெல்லை, விருதுநகர், வேலூர்.

விண்ணப்பக் கட்டணம் :- எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.175, மற்ற பிரிவினருக்கு ரூ.850.

விண்ணப்பிக்கும் முறை : www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.8.2024

விருப்பமுள்ளவர்கள் இன்றைக்கும் விண்ணப்பித்து பயன்பெறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in banks


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->