விஜய்யின் பேச்சை மீறிய தொண்டர்கள் - மாநாட்டு திடலில் மது பாட்டிலுடன் ரகளை.!!
tvk fans in madurai conference place with liquor bottle
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரை மாவட்டம் பாரபத்தி பகுதியில் நடைபெறுகிறது. சுமார் 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மேடைகள், ஒலி ஒளி அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் தயாராக உள்ளன. மேடையின் உச்சியில் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது” என்ற வாசகத்துடன் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் விஜய் ஆகியோரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தலைவர் விஜய் மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார். இந்த நிலையில், தவெக மாநாடு நடைபெறும் பகுதியில் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதும், மாநாட்டு பந்தலுக்கு அருகே உள்ள பார்க்கிங்கில் தவெக தொண்டர்கள் மது அருந்திக் கொண்டிருந்தது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள், ரசிகர்களுக்கு விஜய் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அவரின் பேச்சை மதிக்காமல் சில தொண்டர்கள் மாநாட்டு பந்தலுக்கு அருகிலேயே அமர்ந்து மது குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
tvk fans in madurai conference place with liquor bottle