இளம் பெண் தற்கொலை..வரதட்சனை கொடுமையா?  3 பேர் மீது பாய்ந்த வழக்கு! - Seithipunal
Seithipunal


தற்கொலை செய்து கொண்ட பெண்ணுக்கு  திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

சமீபகாலமாக தமிழகத்தில் வரதட்சனை கொடுமையால் பெண்கள் உயிரிழக்கும் சம்பவங்கள்அரங்கேறி வருகிறது. குறிப்பாக சொல்ல போனால் கடந்த மாதம் திருப்பூரில் இரண்டு பெண்கள் வரதட்சனை கொடுமையால் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். கணவன் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி தான் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கணவன் குடும்பத்தினர் செய்த  கொடுமையால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரு அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் கல்பருத்திவிளை பகுதியை சேர்ந்த அனில் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சிந்து. இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கடந்த18-ந்தேதி வீட்டில் இருந்த மனைவி சிந்து திடீரென விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.உறவினர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் சிந்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து சிந்துவின் தந்தை சுரேஷ்குமார் புதுக்கடை போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். இதுதொடர்பான அந்த மனுவில், “திருமணத்திற்கு பிறகு அவரது மாமியார் மற்றும் கணவரின் சகோதரர் ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால், மனவருத்தத்தில் இருந்து வந்த எனது மகள் தற்கொலை செய்து கொண்டார். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.

அந்த புகாரின் பேரில் சிந்துவின் கணவர் அனில், அவரது தாயார் கலா, அனிலின் சகோதரர் அனு ஆகியோர் மீது புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட சிந்துவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young woman's suicide Is it due to dowry harassment? Case filed against 3 people


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->