4-வது நாளாக தடை...குற்றால அருவிகளில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு!
Floods continue for the 4th day in Kurathalaiar waterfalls
தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது .இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால்,தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
முற்றிலும் மழைப்பொழிவு குறைந்ததால் குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று தணிந்தது. ஆனால் அருவிகளில் வெள்ளத்தின் சீற்றம் இன்னும் குறையவில்லை.
இந்நிலையில் 4-வது நாளாக இன்றும் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை முதலே குற்றால அருவிகளுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இன்று முதல் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினம் மற்றும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக வெளியூரில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது மழை இல்லாததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைய வாய்ப்புள்ளது. இதையடுத்து அனைத்து அருவிகளிலும் விரைவில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுபவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
English Summary
Floods continue for the 4th day in Kurathalaiar waterfalls