நெல்லை வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா - ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடம் திடீர் மாற்றம்..!!
helipad change for union minister amitsha come in nellai
தமிழக பாஜக சார்பில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான ‘பூத் கமிட்டி' மாநாடு நாளை மாலை தச்சநல்லூரில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக அவர் நாளை நெல்லைக்கு வருகிறார். இந்த மாநாட்டுக்கான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பயணிக்கும் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள கல்லூரியில் ஹெலிபேடு அமைக்கப்பட்டிருந்தது.

இந்த ஹெலிபேடில் நேற்று ஹெலிகாப்டரை தரையிறக்குவதற்கான ஒத்திகை நடந்தது. ஆனால் அந்த பகுதியில் ஹெலிகாப்டரை தரையிறக்குவதில் திடீரென சிக்கல் ஏற்பட்டது. அதாவது, அந்த பகுதியில் மரங்கள் நிறைய இருப்பதால் 3 ஹெலிகாப்டர்களையும் ஒரே நேரத்தில் தரையிறக்குவதற்கான சூழல் இல்லை.
மேலும், ஒத்திகைக்காக கொண்டுவரப்பட்ட ஹெலிகாப்டர் நீண்டநேரம் வானில் வட்டமிட்டபடியே தரையிறங்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. ஆகவே இந்த ஹெலிபேடுக்கு மத்திய பாதுகாப்புப்படை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, மத்திய பாதுகாப்புபடை வீரர்களும், நெல்லை மாநகர போலீசாரும் இணைந்து மாற்று இடத்தை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
English Summary
helipad change for union minister amitsha come in nellai