காஞ்சிபுரம் || ஆண் நண்பருடன் சேர்ந்து மது அருந்திய பெண் பிணமாக மீட்பு - நடந்தது என்ன?
police enquiry to woman murder case in kanchipuram
ஆண் நண்பருடன் சேர்ந்து மது அருந்திய பெண் பிணமாக மீட்பு - நடந்தது என்ன?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தென்புஷ்கரணி பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன்-புஷ்பா தம்பதியினர். கூலி வேலைக்கு செல்லும் வெங்கடேசன் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்த பின்னர் வீட்டிற்கு வந்த வெங்கடேசன் அறைக்குச் சென்ற போது மனைவி புஷ்பா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக் இருந்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் படி போலீசார் விரைந்து வந்து புஷ்பாவின் சடலத்தை மீட்டனர். அப்போது, புஷ்பாவின் உடல் முழுவதும் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதை கவனித்த போலீசாருக்கு புஷ்பாவை யாராவது அடித்து கொன்று, தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.
அதன் பின்னர் போலீசார் புஷ்பாவின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், "புஷ்பாவிற்கு நிறைய ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்ததும், கணவர் வேலைக்கு போய்விட்டால் உடனே அவர்களை வீட்டிற்கு வரவழைத்து மது அருந்துவார் என்பதும் தெரிய வந்தது.
சம்பவத்தன்று புஷ்பா நண்பர்களில் ஒருவரான திருவள்ளூர் மாவட்டம் ராமாபுரம் பகுதியை சேர்ந்த யோபுவை வீட்டிற்கு வரவழைத்து அவருடன் சேர்ந்து ஒன்றாக மது அருந்தியுள்ளார்.அப்போது புஷ்பா மதுபோதையில் என்னைவிட்டு வேற யாரையுமே கல்யாணம் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்.

இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த யோபு புஷ்பாவை கடுமையாக தாக்கியதில், புஷ்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், யோபு இறந்த புஷ்பாவை தூக்கில் மாட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்டது போல் காட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்த்துச் சென்றுள்ளது தெரியவந்தது.
இதற்கிடையே போலீசார் தன்னை தேடுவதாக அறிந்த யோபு திருவள்ளூர் மணவாளநகர் போலீசில் தானாகவே சென்று சரணடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
police enquiry to woman murder case in kanchipuram