விழுப்புரம் || மகளை திருமணம் செய்து கொடுக்க மறுப்பு - ஆத்திரத்தில் வளர்ப்புத் தந்தையை கொலை செய்த மகன்.! - Seithipunal
Seithipunal


மகளை திருமணம் செய்து கொடுக்க மறுப்பு - ஆத்திரத்தில் வளர்ப்புத் தந்தையை கொலை செய்த மகன்.!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் அருகே கடையம் ஊராட்சியை சேர்ந்தவர்கள் கோவிந்தன்-கலையம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு மகள்கள் உள்ளனர். அதுமட்டுமல்லாமல், கோவிந்தன் அவர்களுடன் சேர்த்து அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் பாரதி என்பவரையும் வளர்த்து வந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று மாலை கோவிந்தனுக்கும் பாரதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாரதி, கோவிந்தன் மற்றும் அவரது மனைவி கலையம்மாளை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம்குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவிந்தன் மற்றும் கலையம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், "பாரதி வளர்ப்பு தந்தையின் மூத்த மகளை விரும்புவதாக கூறி பெண் கேட்டதற்கு  கோவிந்தன் மறுத்துள்ளதும், இதனால் ஆத்திரமடைந்த பாரதி அவர்களை துப்பாகியல் சுட்டுவிட்டு தப்பித்த்துச் சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் தராததால் வளர்ப்புத் தந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police enquiry to son kill father in vilupuram


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->