குமரியில் தங்கை முறை கொண்ட கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - வாலிபருக்கு வலைவீச்சு.!!
police enquiry for sexuall harassment case in kumari
குமரியில் தங்கை முறை கொண்ட கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - வாலிபருக்கு வலைவீச்சு.!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பிபின் பிரியன். கார் ஓட்டுனரான இவர் தங்கை முறை உறவுக்கார பெண் ஒருவரிடம் நன்கு பழகி வந்தார். அந்த மாணவியும் பிபினை அண்ணனாகவே அழைத்து அன்பாக பழகி வந்தார்.

மேலும், பிபின் அந்த மாணவியை கல்லூரிக்கு அழைத்துச் சென்றுவிட்டு, மீண்டும் அழைத்து வருவதும் வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் பிபின் வழக்கம் போல் இல்லாமல், காரில் வந்து அந்த மாணவியை அழைத்து கொண்டு போகும் வழியில் தன் நண்பர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு மாணவிக்கு குளிர்பானம் கொடுத்தார். உடனே அவர் மயங்கினார்.
மாணவிக்கு மயக்கம் தெளிந்ததும் அவரைக் காரில் ஏற்றிவீட்டில் கொண்டுபோய் விட்டார். இடைபட்ட நேரத்தில் நடந்தவை குறித்து மயக்கத்தில் இருந்த மாணவிக்குத் தெரியவில்லை. மறுநாள் பிபின், அந்த மனைவியை மிரட்டும் வகையில் பேசத் தொடங்கினார்.

"அதாவது, மயக்கத்தில் இருந்தபோது உன்னைக் பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ என்னிடம் உள்ளது. நான் அழைக்கும் போதெல்லாம் என்னோடு நெருக்கமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன்.
இதை வெளியில் சொன்னால் உன் மேல் ஆசிட் ஊற்றிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார், பிபின் பிரியன் மீது, வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரைத் தேடி வருகின்றனர்.
English Summary
police enquiry for sexuall harassment case in kumari