சென்னை அருகே பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ரவுடி விஷ்வா என்ற குள்ள விஷ்வா போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிடாய் பகுதியைச் சேர்ந்தவர் குள்ள விஷ்வா. 

இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 4 கொலை வழக்குகள் உள்பட 16 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

குள்ள விஷ்வாவை கைது செய்ய போலீசார் வலைவீசி தேடிவந்த நிலையில், இன்று மாலை சுங்குவார்சத்திரம் அருகே சோகண்டி என்ற இடத்தில் குள்ள விஷ்வா இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவரை கைது செய்ய போலீசார் சுற்றி வளைத்த நிலையில், போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார் குள்ள விஷ்வா. 

அப்போது, போலீசார் தங்களின் பாதுகாப்புக்காக என்கவுண்டரில் விஸ்வாவை சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து காஞ்சிபுரம் எஸ்.பி. சுதாகர் மற்றும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police Encounter Rowdy Kulla Vishwa


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->