14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை., வீடியோ எடுத்து மிரட்டிய அவலம்.!! காமுகனை கைது செய்த காவல்துறை..!! - Seithipunal
Seithipunal


14 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்தவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம்,  ராஜாவூரில் 14 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்கிருக்கும் பள்ளியில் 9 வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவருக்கும்  அந்த பகுதியில் உள்ள தையல்காரர் சிவராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். அப்போது பல முறை அந்த சிறுமியிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டுள்ளார்.அதுமட்டுமின்றி அதனை வீடியோவாகும் எடுத்து அதனை வைத்து மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டுள்ளான்.

இதனால் பயந்து போன அந்த சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்த அந்த தாய் சிவராசுவிடம் போய் கேட்டுள்ளார். ஆனால் சிவராசு அந்த வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். 

இதனை அடுத்து, அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிவராசுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police arrest man for harassing girl


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal