யூடியூப் மூலம் சுயதொழில் ஐடியா.. பல லட்சம் சுருட்டி எஸ்கேப்பானா பலே கில்லாடி..! - Seithipunal
Seithipunal


யூடியூப் மூலம் பலரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுப்பட்ட பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரளாதேவி. இவர் CWDS என்ற அமைப்பை நடத்தியதோடு சர்வலட்சுமி என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வந்தார். இந்த சேனலில் அவர் CWD மூலம் நாப்கின், கற்பூரம், மண்புழு உரம் தயாரித்தல் உட்பட 20 சுயதொழில்களுக்கான பயிற்சி குறித்து பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் அந்த சுயதொழிலுக்கான இயந்திரங்கள் வாங்கி தருவது உற்பத்தி பொருட்களை தாங்களே வாங்கி கொள்வது என பல்வேறு வீடியோக்கள் வெளியிட்டிருந்தார்.

இதனை நம்பி பலர் அவரை பலர் பணம் செலுத்தி உள்ளனர். ஆனால், பணம் பெற்று கொண்ட பின் அவரை தொடர்புகொள்ள முடியாததால்  பணம் கொடுத்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால், அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரை பெற்று கொண்ட காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் CWDக்கு ஆதரவாக வீடியோ பதிவிட்டவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என கேட்டுகொண்டுள்ளனர்.

ஆனால்,  அவர்கள் கூறும் போது தாங்கள் விளம்பரம் மட்டுமே கொடுத்ததாகவும் மோசடிக்கும் தங்களுக்கும் சம்மந்தம் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.  இந்த விவகாரத்தில் தமிழகம் முழுக்க பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police are searching for a woman who tricked many people into starting her own business through YouTube


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->