பாமகவின் முக்கிய நிர்வாகி மறைவு! வேதனையில் டாக்டர் இராமதாஸ்!
PMK Kuchipalaiyam Rajendran death
பாமக மாநில செயற்குழு உறுப்பினர் குச்சிப்பாளையம் இராஜேந்திரன் மறைவுக்கு அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரின் அந்த இரங்கல் செய்தியில், விழுப்புரம் மாவட்டம் ஆணைக்கவுண்டன் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ந.இராஜேந்திரன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
இராஜேந்திரன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே வன்னியர் சங்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டவர். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட போது ஒருங்கிணைந்த கோலியனூர் ஒன்றிய செயலாளராக பணியாற்றியவர். இட ஒதுக்கீடு கோரி நடத்தப்பட்ட ஒரு நாள் சாலைமறியல், ஒரு நாள் தொடர்வண்டி மறியல், ஒரு வார தொடர் சாலைமறியல் உள்ளிட்ட அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்று சிறை சென்றவர்.
இராஜேந்திரனை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
English Summary
PMK Kuchipalaiyam Rajendran death