முக்கிய மாவட்டத்தின் கட்சி அமைப்பு கலைப்பு - பா.ம.க. தலைமை வெளியிட்ட அறிவிப்பு!
PMK Kallakurichi east District issue
கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட கட்சி அமைப்பு கலைக்கப்பட்டுள்ளதாக, பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள சறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அந்த அறிவிப்பில், "கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் தலைவர் உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் அவர்கள் வகித்து பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட கட்சி அமைப்பு கலைக்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க கட்சியின் மாநில அமைப்புக்குழு செயலாளர் தருமபுரி ப.சண்முகம் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
PMK Kallakurichi east District issue