என்எல்சி.,க்கு எதிராக வழக்கு! பாமக வழக்கறிஞர் அதிரடி! இன்றே விசாரணை செய்யும் உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


நெய்வேலி அருகே என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தும் நிலத்தை விவசாயிகளிடமே ஒப்படைக்க கோரி, பாதிக்கப்பட்ட  விவசாயி முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பாலு அவசர முறையீடு செய்துள்ளார்.

பாமக வழக்கறிஞர் பாலு வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் அவர்கள், இந்த வழக்கை இன்று பிற்பகல் விசாரணை செய்வதாக தெரிவித்துள்ளார்.

கையகப்படுத்தப்பட்ட நிலத்தை ஐந்து ஆண்டுக்குள் என்எல்சி நிர்வாகம் பயன்படுத்தாததால், விவசாயிகளிடமே அந்த நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இடைக்கால கோரிக்கையாக 'அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு எந்த ஒரு இடையூறையும் என்எல்சி நிறுவனம் செய்யக்கூடாது' என்ற உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என்றும் பாமக வழக்கறிஞர் பாலு கோரிக்கை வைத்துள்ளார். 

 

கடந்த வாரம் என்எல்சி ஒப்பந்ததார தொழிலாளர்கள் மற்றும் என்எல்சிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து கொண்டிருப்பதால், என்எல்சி நிறுவனத்துக்கும், என்எல்சி தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் என்எல்சி நிர்வாகம் அவசர வழக்கு ஒன்றை தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி தண்டபாணி அவர்கள், பயிர் விளைந்த விவசாய நிலத்தில் புல்டோசரை இறக்கி கால்வாய் வெட்டும் வீடியோவை பார்த்து நான் கண்ணீர் விட்டு அழுதேன். உங்களால் அந்த பயிரை அறுவடை செய்யும் வரை பொறுத்து இருக்க முடியாதா? என்று கேள்வியை வேதனையுடன் என்எல்சி நிறுவனத்திற்கு எழுப்பினார்.

அதற்கு என்எல்சி நிர்வாகம் தரப்பில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விட்டது. நிலத்தின் மதிப்பை விட மூன்று மடங்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தை தற்போது பயன்பாட்டுக்கு எடுக்கும் போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

நீதிமன்றத்தில் பயன்படுத்தக்கூடிய விளக்குகளுக்கும், ஏசிகளுக்கும் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு என்எல்சியின் முக்கிய பங்கு வகிப்பதாக என்எல்சி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

என்எல்சி நிர்வாகத்தின் இந்த பதிலால், கடும் அதிர்ச்சி அடைந்த நீதிபதி தண்டபாணி அவர்கள், 10 வருடமாக காத்திருந்த நீங்கள், அந்த பயிரை இரண்டு மாதத்தில் அறுவடை செய்யும் வரை காத்திருக்கக் கூடாதா? இந்த நிலத்தை எடுப்பதற்கு என்எல்சி நிர்வாகம் ஆயிரம் காரணங்களை கூறினாலும், பயிர்களை அழிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்றார்.

மேலும், இதுசம்பந்தமான இந்த வழக்கு இல்லை. யாரும் இதற்காக வழக்கு தொடரும் இல்லை என்று கூறிய நீதிபதி தண்டபாணி அவர்கள், என்எல்சி நிறுவனத்திற்கும், அதன் ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Balu And Former Case file to Chennai HC for NLC issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->