'மார்கழியில் மக்களிசை' என்பது மாற்று அரசியல் பேசுவதற்கான மேடை'; பறையடித்து நிகழ்வை தொடங்கிவைத்த கனிமொழி..!
Kanimozhi inaugurated Margazhiyil Makkalisai event by beating the parai drum
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் `மார்கழியில் மக்களிசை' என்ற நிகழ்ச்சியை கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட்டது.
நிகழ்வில் திமுக எம்.பி கனிமொழி, இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோர் பறை அடித்து நிகழ்வை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பேசிய கனிமொழி கூறியதாவது: "என் வாழ்த்துக்களை ரஞ்சித்திற்கு தெரிவிக்கிறேன். 06 ஆண்டுகளாக மக்கள் கொண்டாடும் இசையை நிகழ்த்தி கொண்டிருப்பதே மிகப்பெரிய வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மார்கழியில் மக்களிசை என்பது மாற்று அரசியல் பேசுவதற்கான மேடை. கலை என்பது சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக மட்டும் இருக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். கலை என்பது சமூகத்தை செதுக்கக்கூடிய உளியாக, சம்மட்டியாக இருக்க வேண்டும் என்றும், அப்படியான மேடையைத்தான் ரஞ்சித் உருவாக்கியிருக்கிறார் என்று அவரை பாராட்டியுள்ளார்.
மேலும், நம்முடைய கலை வடிவத்தை பிடுங்கிக் கொண்டார்கள். பறையையும் யார் யாரோ பிடுங்கிக் கொண்டார்கள். அதை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார். பறை எங்கள் இசை, நம்முடைய இசை என்பதை நாம் மறுபடியும் உரக்கச் சொல்வோம் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Kanimozhi inaugurated Margazhiyil Makkalisai event by beating the parai drum