நடிகர் விஜய் தேர்தலுக்கு பின்பு கட்சியை நடத்துவாரா..? தலைவன் இப்படியா இருக்க முடியும்..? நடிகர் சரத்குமார் விமர்சனம்..!
Actor Sarathkumar questioned whether actor Vijay will run the party after the elections
'ஒரு பெண் நிர்வாகி கேட்கும் போது வண்டியை நிறுத்தி என்னவென்று கேட்பவர் தான் கதாநாயகனாக இருக்கமுடியும். தலைவனாக இருக்கமுடியும்' என்று தவெக தலைவர் நடிகர் விஜய்யை நடிகர் சரத்குமார் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர் மேலும், கூறியதாவது: நூறுநாள் வேலை திட்டத்தை சிதைப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என்றும், வேலையில்லாத இடத்தில் வேலை செய்துவிட்டு இலவசமாக பணம் கொடுக்கக்கூடாது என்றுதான் சொல்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், திமுக எந்த நலத்திட்டங்களையும் வரவேற்பது இல்லை என்றும் குற்றம் சுமத்தியதோடு, சாதகமாக இருக்கும் திட்டங்களில் அவர்களின் பெயர்களை போட்டுக் கொள்கின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், அவர்களுக்கு பாதகமாக இருப்பதை குற்றச்சாட்டாக கூறுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இன்னும் தேர்தலை சந்திக்காத ஒரு அரசியல் கட்சி தவெக. இப்போதுதான் அவர்கள் களத்திற்கு வந்துள்ளார்கள். தங்களின் கொள்கை, கோட்பாடை சொல்லாமல் தனிநபர் தாக்குதலை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார்.
நடிகர் விஜய் தேர்தலுக்கு பின்தான் கட்சியை நடத்துவாரா..? இல்லையா என்பது தெரியவரும் என்றும், ஒரு பெண் நிர்வாகி கேட்கும் போது வண்டியை நிறுத்தி என்னவென்று கேட்பவர்தான் கதாநாயகனாக இருக்கமுடியும். தலைவனாக இருக்கமுடியும் என்று தெரிவித்துள்ளார். விஜய் இறங்கி பேசியிருந்தால் இன்று அவர் (தவெக பெண் நிர்வாகி) தூக்க மாத்திரை சாப்பிடிருக்கமாட்டார் என்றும் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தேர்தலில் பிரதிபலிக்கும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பாஜக தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, மாநிலத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, எத்தனை தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
English Summary
Actor Sarathkumar questioned whether actor Vijay will run the party after the elections