தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!
Plus 2 Public Examination Results to be Released Tomorrow in Tamil Nadu
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மே 08-ஆம் தேதி திட்டமிட்டபடி வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 02 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 02 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 08 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 06 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில், பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவித்தபடி மே 08-இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியீடு சற்று தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு முடிக்கப்பட்டு, மாணவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

எனினும், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகளை வெளியிட அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதனால், திட்டமிட்டபடி மே 08-இல் பிளஸ் 2 முடிவுகளை வெளியிட முடியாது என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், திட்டமிட்டப்படி, நாளை மே 08-ஆம் தேதி திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை காலை 09.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. மாணவர்கள் தங்களின் மதிப்பெண் விபரங்களை, 'ஆன்லைன்' வழியில் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை, https://results.digilocker.gov.in மற்றும் www.tnreuslts.nic.in ஆகிய இணையதளங்களில், தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும், தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.
7845252525 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனை உதவி எண்கள்: 14417 / 104/ 14416 என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
English Summary
Plus 2 Public Examination Results to be Released Tomorrow in Tamil Nadu