கரூர் சம்பவம் - சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்.!!
petition against cbi investigation to karoor incident
கரூரில் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த சனிக்கிழமை, சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள், கூடுதல் இழப்பீடு கோரிய மனுக்கள் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. போலீஸ் விசாரணை தொடக்க நிலையில் தான் உள்ளது. சிபிஐ விசாரணை கோரும் மனுதாரர்களுக்கும் கரூர் சம்பவத்துக்கும் தொடர்பில்லை.

மனுதாரர்கள் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும் அல்ல. தற்போதைய சூழ்நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியதில்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, வரும் 10ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
English Summary
petition against cbi investigation to karoor incident